காதல் ஆசை காட்டி இளம்பெண் கர்ப்பம்; திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்கும், வடபழனியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
காதல் ஆசை காட்டி இளம்பெண் கர்ப்பம்; திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
Published on

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் அழகு நிலைய ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வடபழனியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து காதல் மற்றும் திருமண ஆசை காட்டி அந்த இளம்பெண்ணுடன் அனந்தகிருஷ்ணன் நெருக்கமாக இருந்தார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்யும்படி காதலன் அனந்தகிருஷ்ணனிடம் தெரிவித்தார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து தொடர்ந்து காலம் தாழ்த்தி அந்த இளம்பெண்ணை ஏமாற்றி வந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அசோக்நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com