திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செய்யாறில் திருமணம் ஆன 2 ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செய்யாறு

செய்யாறில் திருமணம் ஆன 2 ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திருமணம்

வந்தவாசி தாலுகா பெரணமல்லூரை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரியும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

அதன்பின் பிரவீன் குமார் தாயாருக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரவீன் குமார் தனது மனைவி புவனேஸ்வரியுடன் செய்யாறு டவுன் பசும்பொன் நகரில் கடந்த 1-ந் தேதி முதல் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தற்கொலை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரவீன்குமார், பெரணமல்லூரில் வசிக்கும் தாயினைப் பார்க்கச்சென்ற போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த புவனேஸ்வரி அன்றே தனது தாய் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு மீண்டும் தனது செய்யாறுக்கு திரும்பினார். இந்நிலையில் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புவனேஸ்வரியின் தாயார் விஜயா செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் திருமணம் ஆன 2 ஆண்டுகளில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com