வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய கணவர், பெற்றோர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார்.
தற்கொலை
கோப்புப்படம்
Published on: 

தர்மபுரி,

வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர், பெற்றோர் கூறியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

2 மாதங்களுக்கு முன்பு திருமணம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள செக்காம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவருடைய மகள் மோகனப்பிரியா (20 வயது). டெய்லரான இவருக்கும், அம்மாபாளையத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு அரூரில் வேலைக்கு சென்று வந்த மோகனப்பிரியா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார்.

விஷம் குடித்தார்

அப்போது வேலைக்கு செல்ல வேண்டாம் என்று மோகனப்பிரியாவின் கணவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு வந்த மோகனப்பிரியாவிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோரும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா பெற்றோர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மோகனப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com