மொளசி அருகேஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு

மொளசி அருகேஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
Published on

பள்ளிபாளையம்:

மொளசி அருகே கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய வீட்டிற்கு திருப்பத்தூரை சேர்ந்த உறவினரான விமல் (வயது 19) என்பவர் வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து வெப்படை தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் விமலை தேடும் பணியை தொடங்கினர். இந்த நிலையில் நேற்று காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய விமல் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com