உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து

மார்க்ராமின் கோப்பை வென்ற சதத்தைப் பற்றி குறிப்பிடாமல் பாராட்டு முழுமையடையாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அணியை தகுதியான வெற்றிக்கு அழைத்துச் சென்ற பவுமாவுக்கு சிறப்பு பாராட்டுகள்.

உங்கள் அற்புதமான செயல்திறனால் விமர்சகர்களை வாயடைக்கச் செய்துள்ளீர்கள். மார்க்ராமின் கோப்பை வென்ற சதத்தைப் பற்றி குறிப்பிடாமல் பாராட்டு முழுமையடையாது.

லார்ட்ஸில் உங்கள் வெற்றி ஜோகன்னஸ்பர்க்கில் மட்டுமல்ல, தொலைதூர சென்னையிலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com