கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழநத்தம் மேலூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழநத்தம் மேலூரை சேர்ந்த தங்க மாயாண்டி (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன வாலிபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அந்த வாலிபருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தங்கமாயாண்டியை திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com