கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட நடுகல்லூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட நடுகல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சுந்தரபாண்டியனை சுத்தமல்லி காவல் நிலைய போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com