அண்ணன்-தம்பியை தாக்கிய வாலிபர் கைது

கொடுக்கல்-வாங்கல் தகராறில் அண்ணன்-தம்பியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அண்ணன்-தம்பியை தாக்கிய வாலிபர் கைது
Published on

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கராஜ் மகன்கள் மதனகோபால் (வயது 28), ஞானசேகர் (20). இவர்களுக்கும் பழனி மதனபுரத்தை சேர்ந்த சக்திவேல் (28) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 23-ந்தேதி அண்ணன்-தம்பி இருவரும் அடிவாரம் பகுதியில் வந்த போது, சக்திவேல் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். கைதான சக்திவேல் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com