போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

வள்ளியூரில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
Published on

வள்ளியூர்:

வள்ளியூரில் உள்ள பூங்காவில் காதல் ஜாடிகள் அத்துமீறுவதாக வள்ளியூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றும் ஆவரைகுளத்தை சேர்ந்த ராபின்சன் பிரதாப் சிங் (வயது 30) பூங்காவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த ராபின்சன் பிரதாப் சிங் அங்கு சென்று விசாரித்தார். அப்போது, போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரை அந்த வாலிபர் தாக்கினார். இதில் போலீஸ்காரர் ராபின்சன் பிரதாப் சிங்குக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிந்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com