சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
Published on

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

காதல் திருமணம்

மண்டைக்காடு புதூர் சி.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் ஜான்நாயகம் (வயது 55). மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் மேரி டார்வின் மெல்பா. இவரை அதே ஊரை சேர்ந்த ரீகன் (34) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் ரீகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி டார்வின் மெல்பா கடந்த 1 ஆண்டுக்கு முன்பு தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

தகராறு

அப்படியும் ரீகன் விடாமல் ஜான்நாயகம் வீட்டுக்கு அடிக்கடி சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அதே போல் நேற்று முன்தினம் காலையில் ரீகன் ஜான்நாயகம் வீட்டுக்கு சென்று மனைவி, மாமனார், மாமியாரிடமும் தகராறில் ஈடுபட்டார்.

உடனே இதுபற்றி ஜான்நாயகம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் முரளீதரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரீகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

அப்போது ரீகன் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் முரளீதரனை தாக்கினார். இதில் முரளீதரன் உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காயம் அடைந்த சப் - இன்ஸ்பெக்டர் முரளீதரன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com