நடைபயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி செல்போன் பறிப்பு: வாலிபர் கைது

ஏரல் பெருங்குளம்- சிவகளை ரோடு பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த நபரை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் வழிமறித்து, கல்லால் தாக்கி, செல்போனை பறித்துச் சென்றார்.
வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குளம்- சிவகளை ரோடு பகுதியில் கடந்த 23-ம் தேதி நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த ஒரு நபரை அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் வழிமறித்து, கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு, அந்த நபரின் செல்போனை பறித்துச் சென்றார்.

வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏரல் பகுதியைச் சேர்ந்த முப்பிலிமாடன் மகன் ராஜூ(எ) ராஜபாண்டி (வயது 32) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜபாண்டியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com