நெல்லையில் பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தச்சநல்லூரில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவரை குலவணிகர்புரம், திம்மராஜபுரம் பகுதிகளைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சேர்ந்து, சாதியின் பெயரை சொல்லி அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கினர்.
நெல்லையில் பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷ் மருத்துவமனை அருகில் தனியார் பேருந்து ஓட்டுநரான மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 27) என்பவரை குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆயிரத்தான்(24) மற்றும் 2 பேர் சேர்ந்து, சாதியின் பெயரை சொல்லி அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆயிரத்தான் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com