

வேலூர்,
ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த வர் ஜெயக்குமார் (வயது 34). இவரின் மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.
அதேபோல் ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சேட்டுவின் மகன் அஜித்குமார் (26). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. அவரின் மனைவி தற்போது கர்ப்ப மாக உள்ளார்.
அஜித்குமார் திருப்பதியில் பானிபூரி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும். ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
பொன்னேரி பகுதியில் உள்ள பெரிய ஏரி வழியாக நேற்று முன்தினம் ஜெயக்குமார் ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த அஜித்குமார் திடீரென ஜெயக்குமார் ஓட்டிச்சென்ற மொபட் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். கட்டுப் பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. அப் போது அஜித்குமார். உன்னை கொல்லாமல் விடமாட்டேன், என மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கூறி ஜோலார்பேட்டை போலீசில் அஜித்குமார் மீது புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ஜெயக்குமாரும், அஜித்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந் தனர். இதனால், ஜெயக்குமாரின் வீட்டுக்கு அஜித்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ் வாறு சென்று வந்தபோது ஜெயகுமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும், அஜித்குமாருக்கும் இடையே 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஜெயக்குமாருக்கு தெரியவரவே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. உறவினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு சேர்ந்து வாழும்படி அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் சிவரஞ்சினியும், அஜித்குமாரும் மீண்டும் பழகி கள்ளக்காதலை வளர்த்து வந்த னர். அது. மட்டுமின்றி அஜித் குமார். சிவரஞ்சனியிடம் இருக்கும் தகாத உறவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ஜெயக்குமார், சிவரஞ்சனியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள் ளார். அந்த வழக்கு தற்போது திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஜெயக்குமாரை, அஜித்குமார் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அஜித்கு மாரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனின் மனைவியிடம் திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்டு நண்பனை காரில் இடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது