தூத்துக்குடியில் ஆட்டோ, கார், லாரி கண்ணாடிகள் உடைப்பு: வாலிபர் கைது

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஒரு வாலிபர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ, லாரி, கார் ஆகியவற்றின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.
தூத்துக்குடியில் ஆட்டோ, கார், லாரி கண்ணாடிகள் உடைப்பு: வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி, பிரையன்ட்நகர் 11வது தெருவை சேர்ந்த சரவணன் மகன் இசக்கி (வயது 26), சொந்தமாக ஆட்டோ வைத்து தெழில் செய்து வருகிறார். இவர் கடந்த 19ம்தேதி இரவு கட்டபொம்மன்நகரில் சாலையேரத்தில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அதே இடத்தில் இவரது உறவினரான சரவணகுமார் தனது காரையும், ஜெயராமன் என்பவர் தனது லாரியையும் நிறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் ஒரு வாலிபர் சாலையேரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டே, லாரி மற்றும் கார் ஆகியவற்றின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரையன்ட்நகர் 11வது தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ஆகாஷ்(23) என்பவரை கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com