மார்பிங் செய்து ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி - வாலிபர் கைது

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்தவர் வினோத் (27 வயது). இவருக்கு சென்னை நங்கநல்லூர் ரகுபதி நகர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், வினோத்தின் வங்கி கணக்கின் மூலம் இளம்பெண் தனது தொழில் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பல தவணைகளாக ரூ.13 லட்சம் வரை வினோத்துக்கு பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ஆன்லைன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, வினோத் தன்னிடம் பண மோசடி செய்ததாகவும், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் என்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அவர் மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com