தஞ்சையில் 441 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கைது
Published on: 

தஞ்சாவூர்,

தஞ்சையில் 441 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

தஞ்சை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு சுழற்சி முறையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி. சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

441 கிலோ பறிமுதல்

அப்போது நேசனல் பார்மா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரதாப் (வயது32) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 441 கிலோ புகையிலை பொருட்கள். ரூ.82 ஆயிரம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.

X