கோவையில் விபத்தின்போது மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது

கோவையில் விபத்தின்போது மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் விபத்தின்போது மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது
Published on

கோவை,

கோவையை சேர்ந்த 20 வயதான இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்றபோது அங்கு சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. அப்போது அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதுது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தெரிகிறது.

உடனே அந்த வாலிபர், மோதலை மறந்து விட்டு, அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன்சென்று, தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த மாணவியின் கையை பிடித்து, கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இது குறித்து அந்த மாணவி, குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்தது கோவைப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது செரீப் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த மாணவி, சம்பவம் நடந்த போது சிரித்தபடி பேசியதால், அதை தவறாக எடுத்துக்கொண்ட அவர், பின்தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது செரீப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com