நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லை மாநகரம் டவுண், தொட்டி பாலத்தெரு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி பாலத்தெரு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டவுண் தொட்டி பால தெருவை சேர்ந்த ரவி மகன் மோகன்காந்தி (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

போலீசார் மோகன்காந்தியிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் சுமார் 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த டவுண் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com