சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

ஆம்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
Published on

ஆம்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள அஜித் குமார் (வயது 24) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com