நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

நெல்லை மாநகரம் சந்திப்பு, கைலாசபுரம் ஆற்று படுகை அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகித் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு, கைலாசபுரம் ஆற்று படுகை அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகித் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த சந்திப்பு, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிபாண்டி (வயது 24) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 80 கிராம் கஞ்சா இருந்தது. விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com