நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மதன் வைத்திருந்தார்.
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது
Published on

நெல்லை மாவட்டம், தேவர்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லூக் அசன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல இலந்தைகுளம் அருகே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மேல இலந்தைகுளம், பழைய ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்த மதன் (வயது 20) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 82 கிராம் கஞ்சாவையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com