திருச்செந்தூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ நாலுமூலைகிணறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ நாலுமூலைகிணறு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ நாலுமூலைகிணறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

வாலிபர் கைது:

இது தொடர்பாக திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபாகரன்(எ) சஞ்சய் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com