திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தருவை பனங்காடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலஇலந்தைகுளத்தை சேர்ந்த செல்லதுரை (வயது 19) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 20 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்லத்துரையை நேற்று முன்தினம் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com