திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனவன்குளம் ஊரில் உள்ள குளத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வடக்கு மீனவன்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 22) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 40 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், இசக்கிமுத்துவை களக்காடு காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இசக்கிபாண்டியை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.






