திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலாபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 22) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 165 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மதன்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 165 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story






