திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமூகரெங்கபுரம் தெற்கூர் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த வினித் (வயது 27) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், வினித்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com