சீவலப்பேரியில் வைக்கோல் படப்பு தீயிட்டு சேதம்: வாலிபர் கைது


சீவலப்பேரியில் வைக்கோல் படப்பு தீயிட்டு சேதம்: வாலிபர் கைது
x

சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி, பாலாமடை, தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் (வயது 43) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுடலைமுத்து(30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதனை மனதில் வைத்துக்கொண்டு, பாலாமடையை சேர்ந்த குமாரின் வைக்கோல் படப்பை சுடலைமுத்து தீயிட்டு சேதப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து குமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சுடலைமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story