திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது


திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது
x

17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் சத்தியசீலன்(வயது 22). இவர், தஞ்சையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பொருட்களை டோர் டெலிவரி செய்பவராக வேலை செய்து வருகிறார். இவரும், 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி சத்தியசீலன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை புகைப்படம் எடுத்து தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டி தவறாக நடந்து வந்துள்ளார். சத்தியசீலனின் மிரட்டல் தொடர்ந்து தாங்க முடியாமல் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சத்தியசீலன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story