போதையில் பெண் துப்புரவு பணியாளரிடம் பாலியல் அத்துமீறல் - வாலிபர் கைது

போதை ஆசாமி ராஜ்குமார் பெண் துப்புரவு பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளை பேசி, தகராறில் ஈடுபட்டார்.
போதையில் பெண் துப்புரவு பணியாளரிடம் பாலியல் அத்துமீறல் - வாலிபர் கைது
Published on

சென்னை,

சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் துப்புரவு பணியாளர்கள் 3 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த போதை ஆசாமி ராஜ்குமார் (வயது 36) என்பவர் பெண் துப்புரவு பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளை பேசி, தகராறில் ஈடுபட்டார். ஒரு பெண் ஊழியரை கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்தார்.

பின்னர், அந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். உடனடியாக பெண் ஊழியர்கள் கூச்சல் போடவே சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கூட்டமாக கூடிவிட்டனர். இதனால் பயந்துபோன ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் துப்புரவு பணியாளர்கள் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர். பெயிண்டராக வேலை பார்த்து வந்த ராஜ்குமார் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com