இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Published on: 

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10-ம் வகுப்பு மாணவியான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது அவர் வேலூர் மாவட்டம் மேல் மணவூர் மோட்டூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவருடைய மகன் டெனிலின் (வயது23) வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்று அந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும், டெனிலுக்கும் (23) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டெனிலினை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com