தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது

ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒரு பயணியிடம் வெளிமாநில மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி அருகே உள்ள சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 28) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 மதுபாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com