வி.கே.புரத்தில் பைக் திருடிய வாலிபர் கைது

வி.கே.புரம் கிருஷ்ணன் கோவில் அருகே ஒருவர் தனது எலெக்ட்ரிக் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு வந்து பார்த்த போது நிறுத்தியிருந்த இடத்தில் அந்த பைக்கை காணவில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம், பசுக்கிடைவிளையை சேர்ந்த ஜெயராஜ் (வயது 47) என்பவர் கடந்த 13ம்தேதி, வி.கே.புரம் கிருஷ்ணன் கோவில் அருகே தனது எலெக்ட்ரிக் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு வந்து பார்த்த போது நிறுத்தியிருந்த இடத்தில் எலக்ட்ரிக் பைக்கை காணவில்லை. இதுகுறித்து ஜெயராஜ் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் ரவனசமுத்திரம், தெற்கு தெருவை சேர்ந்த முப்பிடாதி(26) என்பவர் எலெக்ட்ரிக் பைக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், முப்பிடாதியை கைது செய்து, அவரிடமிருந்து எலக்ட்ரிக் பைக்கை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






