திருநெல்வேலியில் செல்போன் திருடிய வாலிபர் கைது


திருநெல்வேலியில் செல்போன் திருடிய வாலிபர் கைது
x

தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது செல்போனை காணவில்லை என தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம், கே.கைலாசபுரம், நடுத் தெருவை சேர்ந்த ராணி (வயது 43) என்பவரும் அவரது கணவரும் திருநெல்வேலிக்கு வந்து விட்டு திரும்பி ஊருக்கு செல்லும் வழியில் தாழையூத்து ஐ.ஓ.பி. பேங்க் அருகே உள்ள பேக்கிரியில் டீ குடித்துவிட்டு செல்லும் போது ராணி வைத்திருந்த செல்போனை காணவில்லை.

இதுகுறித்து ராணி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து பாண்டியன் விசாரணை மேற்கொண்டார். அதில் கங்கைகொண்டான், வடகரை, கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி(27) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியை நேற்று (31.5.2025) போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

1 More update

Next Story