வள்ளியூரில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது


வள்ளியூரில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
x

வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர், பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அவர் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்த செல்போனை காணவில்லை.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலைய சரகம், துலக்கர்பட்டி, கீழத் தெருவை சேர்ந்த அசன் பாத்து (வயது 56) என்பவர் நேற்று முன்தினம் வள்ளியூரில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டி வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறி அமர்ந்துள்ளார். பின்பு அவர் வைத்து இருந்த பையை பார்த்த போது அதிலிருந்த செல்போனை காணவில்லை.

இதுகுறித்து அசன் பாத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் புதிய பேட்டை, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(எ) ஆண்டனி (வயது 22) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், கண்ணன்(எ) ஆண்டனியை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை கைப்பற்றி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

1 More update

Next Story