ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டை காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 60) என்பவர் கடந்த 14ம்தேதி, ஆடு(1) காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தெற்கு வள்ளியூர், அழகப்பபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ஸ்ரீராம்(36) என்பவர் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீராமை, சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com