தாழையூத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

தாழையூத்து பகுதியிலுள்ள காலி இடத்தில் 7 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.
தாழையூத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, காமராஜ்நகரை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 31) என்பவர் 12.6.2024 அன்று தான் வளர்க்கும் 7 ஆடுகளை தாழையூத்து செல்வம்நகர் ரோட்டு பகுதியிலுள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.

இதுகுறித்து இசக்கிமுத்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தாழையூத்து, செல்வம்நகரை சேர்ந்த பாண்டி(44) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், பாண்டியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com