திருநெல்வேலியில் ஜல்லி கற்கள் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்

கங்கைகொண்டான், பாப்பான்குளம் விலக்கு அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சோதனை செய்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், பாப்பான்குளம் விலக்கு அருகே சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மறுகால்தலை, வடக்கு தெருவை சேர்ந்த முருகன் (வயது 28) வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக 3 யூனிட் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கங்கைகொண்டான் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 3 யூனிட் ஜல்லிகற்களையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






