

திருச்சி,
கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 65). இவர் கடந்த 6-ந் தேதி தனது பேரனுடன் ஜனசதாப்தி விரைவு ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்தார். அப்போது அவர் தனது கைப்பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருட்டுபோனது.
இது குறித்த புகாரின்பேரில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கிலியை திருடியது காஜாப்பேட்டையை சேர்ந்த ராம்குமார் (38) என்பது தெரியவந்தது. அவரை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.