திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது

வீரவநல்லூர், ராஜகுத்தாலபேரியில் பொது கழிப்பிடத்தில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை காணவில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் மூழ்கி மோட்டாரை 27.5.2025 அன்று காணவில்லை.
இதுகுறித்து பிரம்மநாயகம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் லியோ ரெனிஷ் புலன் விசாரணை மேற்கொண்டார். அதில் வீரவநல்லூர், சீனியாபுரம், வடக்கு தெருவை சேர்ந்த ராஜாராம்(39) மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், ராஜாராமை நேற்று (29.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






