மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Published on

நெல்லை சந்திப்பு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் குணசேகரன். தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி இருந்தாராம். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெங்கராஜ் மகன் பாபு (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com