நெல்லையில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் ஒருவரை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி தலையில் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லையில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், நம்பிக்கை நகரை சேர்ந்த பிரேமா (வயது 48) என்பவரின் கணவரான சேரகுமார் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரதாப்(22) என்பவர் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தலையில் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பிரேமா கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com