திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திருநெல்வேலி தாலுகா, கொம்மந்தானூர் பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கொம்மந்தானூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜன் (வயது 43) என்பவர் 1.6.2025 அன்று இரவு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் ஒருவர் சேர்ந்து ராஜனிடம் தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியதை பார்த்த, அவரது மனைவி பிச்சம்மாள் தடுக்க வந்த போது அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சந்தனகுமாரை நேற்று (3.6.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com