மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது

கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருதூர் இந்திராநகரை சேர்ந்த உதயகுமார் (வயது 19) என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின், உதயகுமாரை நேற்று கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்த தாலுகா காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com