பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

கறம்பக்குடி அருகே பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் ஆலங்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது
Published on

பெண் சடலமாக மீட்பு

கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35). இவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை என அவரது தந்தை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

கீழே தள்ளியதில் இறந்தார்

இதையடுத்து இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி கொத்தக்கோட்டை குடியிருப்பை சேர்ந்த பாண்டியராஜ் (19) என்பவர் பழனியம்மாளிடம் 4 நாட்கள் தொடர்ந்து செல்போனில் பேசியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கறம்பக்குடி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், தனது நண்பர் மூலம் செல்போன் நம்பர் பெற்று பழனியம்மாளிடம் பேசிவந்ததாகவும், கடந்த 23-ந்தேதி தைல மரக்காட்டில் இரவு நேரத்தில் பழனியம்மாளை கீழே தள்ளியதில் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

வாலிபர் சிறையில் அடைப்பு

இதையடுத்து பாண்டியராஜ கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 குழந்தைகளின் தாயான பழனியம்மாளை கொன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com