குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திசையன்விளை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே மகாதேவன்குளம், கீரைகாரன்தட்டு சண்முக தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் சுடலைக்கண்ணு என்ற துரை (வயது 35). இவர் அடிதடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் கார்த்திகேயன் இதனை ஏற்று சுடலைகண்ணுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com