கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி டவுண், சிவா தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வசூர்யா (வயது 19) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று செல்வசூர்யா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com