கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி தச்சநல்லூர், ஊருடையான்குடியிருப்பு, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளாண்டி மகன் வேல்பிரபாகரன்(எ) பிரபா (வயது 25) என்பவர் திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கெலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து அந்த வாலிபர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், பேலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுபடி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com