கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர், மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை மாநகரம், பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சண்முகசுந்தரம்(எ) சுந்தர் (வயது 35) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) மதன், போலீஸ் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுகுமார், பேட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று சண்முகசுந்தரம்(எ) சுந்தர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com