கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாநகரம், பேட்டை, கலுங்கடி தெருவைச் சேர்ந்த பெருமாள்(எ) மண்டையன் பெருமாள் மகன் கொம்பையா(எ) கார்த்திக் (வயது 22) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று கொம்பையா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com