பணம் பறிப்பு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரம், கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
பணம் பறிப்பு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம், கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த அழகுவேல் கண்ணன் மகன் அருணாச்சலம் (வயது 20) என்பவர், நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம்), பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு- குற்றம்) முத்து கணேஷ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி 19ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com